தேசிய நிதி அறிவிக்கை ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய நிதி அறிக்கை ஆணையம், சிறு, நடுத்தர தணிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ஆறாவது விழிப்புணர்வு நிகழ்ச்சியை அகமதாபாத்தில் நடத்தியது

प्रविष्टि तिथि: 21 AUG 2026 6:45PM by PIB Chennai

தேசிய நிதி அறிக்கை ஆணையம், 2025-ல் தொடங்கப்பட்ட தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தனது ஆறாவது நிகழ்ச்சியை அண்மையில் அகமதாபாத்தில் நடத்தியது. “ஒரு சிறந்த நிதி அறிக்கைச் சூழலை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் தலைவர் திரு நிதின் குப்தா, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் பட்டயக் கணக்காளர் திரு பிரசன்ன குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிறு, நடுத்தர தணிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, அவர்களுக்குத் தொழில்முறை ரீதியாக ஆதரவளித்தல், தணிக்கைத் தரத்தை வலுப்படுத்துதல், நிதி அறிக்கையிடலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ-யுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் தலைவர் திரு நிதின் குப்தா, தமது சிறப்புரையில் பொது நலனைப் பாதுகாப்பதிலும் நிதி அறிக்கையிடலில் நம்பிக்கையை வளர்ப்பதிலும் கணக்கியல் துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302084&reg=3&lang=1

(Release ID: 2302084)

****

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2302200) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati