பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 7:01PM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இன்று (21.08.2026), அத்துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மிஷன் சக்தி திட்டத்தின் மூன்று முக்கிய அங்கங்களான பெண்களுக்கு ஒரே கூரையின் கீழ் சேவை வழங்கும் மையங்கள் (OSC), பிரதமரின் தாய்மையைப் போற்றுவோம் திட்டம், பெண்கள் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆலோசனைக் குழுவில் உள்ள இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
உறுப்பினர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உறுதியாக உள்ளது என்று கூறினார். மிஷன் சக்தி என்பது பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கான அரசின் ஒருங்கிணைந்த திட்டம் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், உறுப்பினர்களின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, 'மிஷன் சக்தி' திட்டத்தின் கீழ் தேவையுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302092®=3&lang=1
(Release ID: 2302092)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302173)
आगंतुक पटल : 7