உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப் போக்குவரத்து அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 21 AUG 2026 7:04PM by PIB Chennai

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (21.08.2026) கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்றது. மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு முரளிதர் மோகல் இதில் பங்கேற்றார்.

மைசூருவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 'உடான்' திட்டத்தின் அடுத்த கட்டம், விமானப் பயிற்சி நிறுவன சூழலமைப்பில் சீர்திருத்தங்கள், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியின் மறுசீரமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய திரு ராம் மோகன் நாயுடு, இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சி, முக்கிய வழித்தடங்கள் மற்றும் விமான நிலையங்களின் மேம்பாட்டையும் தாண்டி விரிவடைந்து வருவதாகக் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘உடான்’ தொலைநோக்குப் பார்வையால், விமானப் போக்குவரத்து பிராந்திய வளர்ச்சிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு உந்துசக்தியாக மாறி வருகிறது என்று அவர் தெரிவித்தார். உடான் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ், முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.28,840 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம், விமானப் போக்குவரத்துத் துறை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என்று திரு ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302094&reg=3&lang=1

(Release ID: 2302094)

****

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2302167) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada