சுற்றுலா அமைச்சகம்
பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்ப்பூர் பிரகடனம் ஏற்பு
प्रविष्टि तिथि:
21 AUG 2026 6:28PM by PIB Chennai
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கும் பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் அறிக்கை 2026 எனப்படும் ஜெய்ப்பூர் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று (21.08.2026) நிறைவடைந்தது.
இக்கூட்டத்திற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஒன்பது பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. அமைச்சர்கள் பங்கேற்பில், பிரேசிலின் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு குஸ்டாவோ கோஸ்டா பெலிசியாண்டோ, ஈரானின் சுற்றுலா அமைச்சர் திரு ரெசா சலேஹி அமிரி, தென்னாப்பிரிக்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமிகு பட்ரிசியா டி லில், ஐக்கிய அரபு சுற்றுலாத்துறை அமைச்சர் மேதகு அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி ஆகியோருடன், சீனா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தூதுக்குழுத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்தியக் குழுவில், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு புவனேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ஹரிகிஷோர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
ஜெய்ப்பூர் பிரகடனமானது, இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது பிரிக்ஸ் சுற்றுலாப் பணிக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், முன்னுரிமை அம்சங்களையும் பிரதிபலிக்கிறது.
பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்களால் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனம், சுற்றுலாவில் பொறுப்பான, பாதுகாப்பான டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஆற்றலை அங்கீகரிக்கிறது. அத்துடன் சுற்றுலாத் திட்டமிடல், இலக்கு மேலாண்மை, பார்வையாளர் சேவைகள், பன்மொழித் தொடர்பு, பயண வசதி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்கிறது.
பொருளாதார ரீதியாக செழிப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, கலாச்சார ரீதியான ஒரு சுற்றுலாச் சூழல் அமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் முயற்சிகளை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எடுத்துரைத்தார். சுற்றுலா, மக்களை ஒன்றிணைக்கிறது எனவும் அது சமூகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும், கலாச்சாரப் பரிமாற்றத்தை சாத்தியமாக்குகிறது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302067®=3&lang=1
(Release ID : 2302067)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302163)
आगंतुक पटल : 7