சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் கர்மயோகி இயக்கத்தைத் திறம்பட செயல்படுத்தும் வகையில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2026 5:20PM by PIB Chennai
மத்திய சுகாதார அமைச்சகம், அது சார்ந்த துறைகள், நிறுவனங்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கர்மயோகி இயக்கத்தைத் திறம்பட செயல்படுத்தும் வகையில் அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சகம் திறன் மேம்பாட்டு ஆணையம் கர்மயோகி பாரத் ஆகியவற்றுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது.
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 140 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அரசின் அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கும் நிறுவனங்களுக்கிடையேயான செயல்பாட்டு முறைகளில் உள்ள இடர்பாடுகளைக் களைவதற்கும் அறிவுசார் பரிமாற்றம் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றுக்கான தளத்தை இந்த மாநாடு வழங்கியது.
இந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (பயிற்சி) டாக்டர் வினோத் கோட்வால் பங்கேற்று உரையாற்றினார். திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அவர் பராமரிப்பாளர்கள், செவிலியர்கள், துறை சார்ந்த சுகாதார நிபுணர்கள், முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட சுகாதாரத் துறைச் சாரந்த பாடநெறிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சாதனாசப்தா நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அமைச்சகத் துறைகள், நிறுவனங்களைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
சாதனைகள், சவால்கள், எதிர்கால நடவடிக்கைள் குறித்த விளக்கக் காட்சிகளுடன் மாநாடு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302008®=3&lang=1
****
SS/SV/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2302142)
வருகையாளர் எண்ணிக்கை : 54