பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
உலகளாவிய டிஜிட்டல் திறன் மேம்பாட்டுக் கூட்டமைப்பு: திறன் மேம்பாட்டிற்கான உலகளாவிய தளத்தை உருவாக்குதல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2026 6:36PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையத்தால் தொடங்கப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் திறன் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (ஜிடிசிபிஏ), இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளது. அரசு அமைப்புகளின் நிர்வாகத் திறனை வலுப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அளவில் ஆலோசனைகளை முன்னெடுப்பதில் இது முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
2026 பிப்ரவரி 20 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இக்கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான இந்தியாவின் தேசிய கர்மயோகி திட்டத்தின் வெற்றிகரமான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு இது உலக அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் பிரேசில், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை இக்கூட்டமைப்பு இணைத்துள்ளது. இது உலக வங்கி, கேட்ஸ் அறக்கட்டளை, யுனிசெப் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசு நிர்வாகத்தை மேம்படுத்தி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பை இக்கூட்டமைப்பு வழங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301642®=3&lang=1
****
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2301794)
வருகையாளர் எண்ணிக்கை : 81