ரெயில்வே அமைச்சகம்
மும்பை புறநகர் ரயில் சேவைக்காக 238 ஏசி இஎம்யு ரயில் தொகுப்புகளைத் தயாரிக்க ஐசிஎஃப், ஆர்சிஎஃப், எம்சிஎஃப் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
20 AUG 2026 6:31PM by PIB Chennai
சென்னை ஐசிஎஃப், கபூர்தலா ஆர்சிஎஃப் மற்றும் ரேபரேலி எம்சிஎஃப் ஆகிய தனது உற்பத்திப் பிரிவுகள் மூலம் 238 ஏசி இஎம்யு ரயில் பெட்டித் தொகுப்புகளைத் தயாரிப்பதற்கு ரயில்வே அமைச்சகம் முன்னுரிமை அளித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பை நகர்ப்புறப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதற்கு ஏற்ப, ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஃப் மூலம் 120, ஆர்சிஎஃப் மூலம் 71 மற்றும் எம்சிஎஃப் மூலம் 47 என மொத்தம் 238 ஏசி இஎம்யு ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின் அடிப்படையில் இந்த ரயில்களைக் கொள்முதல் செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் பெட்டிகளின் விரைவான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு வழிவகுக்கும். 2027-ம் ஆண்டில் விநியோகம் தொடங்கப்பட்டு, 2030-ம் ஆண்டிற்குள் அனுமதிக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301636®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2301776)
आगंतुक पटल : 6