சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மறுசீரமைக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முதல் ஆய்வுக் கூட்டம்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 6:28PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் (என்சிஎம்) 2026-ம் ஆண்டிற்கான முதல் ஆய்வுக் கூட்டம், அதன் தலைவர் திரு ஹர்ஜித் சிங் கிரேவால் தலைமையில் இன்று (20 ஆகஸ்ட் 2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையத்தின் துணைத் தலைவர் திருமதி எஸ் முனாவரி பேகம், உறுப்பினர்கள் திரு பெர்ஜிஸ் தேசாய், திரு கிளென் இ சௌசா டிக்லோ, செயலாளர் திரு சுசிந்திர மிஸ்ரா, இணைச் செயலாளர் டாக்டர் ஆத்யா நந்த் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிறுபான்மையின மக்களின் நலன்கள், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காகப் பணியாற்றுவதோடு, அவர்களின் நலன்களுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்காணிப்பதே ஆணையத்தின் முக்கியக் கடமை என அதன் தலைவர் திரு ஹர்ஜித் சிங் கிரேவால் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301635®=3&lang=1
****
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301766)
आगंतुक पटल : 6