அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாகாலாந்து துணை முதலமைச்சர், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக் குறித்து கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 3:15PM by PIB Chennai

நாகாலாந்து துணை முதலமைச்சர் திரு யன்துன்கோ பட்டோன் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்தார். அப்போது வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சி, போக்குவரத்து வசதிக் குறித்து அவர்கள் கலந்துரையாடினார்கள். தேசிய வளர்ச்சித் திட்டத்தில் வடகிழக்குப் பிராந்தியத்திற்கு முன்னுரிமை அளித்ததற்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையின் விளைவுகளில் ஒன்றாக, கடந்த 12 ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அமைச்சர் குறிப்பிட்டார். இப்பிராந்தியம் தற்போது போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் புதியக் கட்டத்தைக் காண்பதாகத் தெரிவித்தார். சாலைகள், ரயில்வே முதல் விமான நிலையங்கள், நீர்வழிகள், டிஜிட்டல் இணைப்பு வசதி வரை இப்பிராந்தியத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இது அப்பகுதி மக்களை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைப்பதுடன் வளர்ச்சிக்கானப் புதிய வழிவகைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301510&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2301716) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese