புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் பெருங்கடல், துருவ அறிவியல் தொழில்நுட்பப் பணிக்குழுக் கூட்டம் கோவாவில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 20 AUG 2026 5:33PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், பெருங்கடல், துருவ அறிவியல்  தொழில்நுட்பத்திற்கான பிரிக்ஸ் பணிக் குழுவின் 8-வது கூட்டம் கோவாவில் 2026 ஆகஸ்ட் 12 முதல் 14 வரை நடைபெற்றது. மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசிய துருவ, கடல்சார் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இக்கூட்டத்தை நடத்தியது. அறிவியல், தொழில்நுட்பத் துறையில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மூன்று நாள் மாநாடு நடத்தப்பட்டது.

இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, இந்தோனேசியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் துறைசார் மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், துறை வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டனர். கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல், வலுவான கடல்சார் தகவல் சேவைகளை உருவாக்குதல், அண்டார்டிக் பெருங்கடல் பயணங்களில் கூட்டு ஆராய்ச்சி, இளம் ஆராய்ச்சியாளர்களின் திறன் மேம்பாடு ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

நிறைவு நாள் அமர்வில் காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் டி சீனிவாச குமார் தும்மலா, உறுப்பு நாடுகளிடையே கூட்டு ஆராய்ச்சிக்கான முயற்சிகள், ஆய்வுக் கட்டமைப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301591&reg=3&lang=1

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301690) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu