பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்தியா - மலேசியா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கூட்டுப் பணிக்குழுக் கூட்டம்
प्रविष्टि तिथि:
19 AUG 2026 4:03PM by PIB Chennai
இந்தியா-மலேசியா இடையே, பொது நிர்வாகம், நிர்வாகச் சீர்திருத்தம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த இரண்டாவது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் 18.08.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவ், மலேசியாவின் பொதுச் சேவைத் துறையின் (மேம்பாடு) துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது பஹாரி பின் இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, வெளியுறவு அமைச்சகம், கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், தேசிய நல்லாட்சி மையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மலேசியக் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகளை வரவேற்ற திரு புனீத் யாதவ், இவ்விரு நாட்டு மக்களுக்கிடையேயான வலுவான உறவுகள், பகிரப்பட்ட விழுமியங்கள், பரஸ்பர நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள நீண்டகால, பன்முகத்தன்மை கொண்ட நல்லுறவு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் இருதரப்பு விரிவான உத்திசார் ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளதையும், 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசியாவில் மேற்கொண்ட பயணம், இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகம் அளித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
13 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற முதல் கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், முதலாவது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தின் குறிப்புகள் உறுதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் இரு தரப்பிலிருந்தும் தொடர்பு கொள்வதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301163®=3&lang=1
(Release ID: 2301163)
****
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2301363)
आगंतुक पटल : 10