அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

காயங்களைக் குணப்படுத்துவதற்கு திசுக்களிலிருந்து பெறப்பட்ட மேம்பட்ட உயிரி மருத்துவ முறையை வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 19 AUG 2026 4:38PM by PIB Chennai

குணப்படுத்துவதற்குக் கடினமான காயங்களுக்கு, திசுவிலிருந்து பெறப்படும் மேம்பட்ட உயிரி மருத்துவம் சார்ந்த பொறியியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ ரீதியாகப் பொருத்தமான தீர்வுகளாக மாற்றுவதற்காக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஆர்த்தோகிராஃப்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு "மேம்பட்ட திசுக்களிலிருந்து பெறப்பட்ட உயிரியல் கட்டுகளுக்கான உற்பத்தி அமைப்பு" என்ற திட்டத்திற்காக நிதியுதவி வழங்கியுள்ளது.

இதன் மூலம், நாள்பட்ட காயங்கள், நீரிழிவு காரணமாகப் பாதங்களில் ஏற்படும் புண்கள், தீக்காயங்கள் உள்ளிட்ட மருத்துவ ரீதியான பயன்பாடுகளுக்காக உத்தேசிக்கப்பட்ட உள்நாட்டு உயிரியல் கட்டுகளுக்கான உற்பத்தித் திறன்களை இந்த நிறுவனம் அமைக்கும்.

ஆர்த்தோகிராஃப்ட் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு புத்தொழில் நிறுவனமாகும்.

இது மருத்துவ மறுசீரமைப்பு மற்றும் செயல்பாட்டுப் பணிகளுக்காகத் திசு மாற்றீடுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. காயத்தைக் குணப்படுத்தும் செயல்முறைக்குத் தேவையான, இயற்கையான திசுவின் முக்கிய உயிரியல் மற்றும் கட்டமைப்புப் பண்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, செயல்படக்கூடிய மனிதத் திசுக்களைப் பதப்படுத்தி, நீண்ட காலம் பயன்படக்கூடிய திசு மாற்றீடுகளாக உருவாக்குவதற்கான தனியுரிமம் கொண்ட தொழில்நுட்பங்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.

திசுவின் தரம் மற்றும் உயிரியல் செயல்பாட்டுப் பண்புகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், திறம்பட செல்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட திசு பதப்படுத்தும் வழிமுறையே இத்திட்டத்தின் மையமாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301192&reg=3&lang=1

(Release ID: 2301192)

****

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2301357) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी