சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தூரில் தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்ட மதிப்பாய்வு, திறன் மேம்பாடு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2026 5:25PM by PIB Chennai
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்ட மதிப்பாய்வு மற்றும் திறன் மேம்பாடு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய தொழுநோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்துள்ள இப்பயிலரங்கம் திட்ட செயல்பாட்டை வலுப்படுத்துதல், தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல், தொழுநோய் பரவலைத் தடுத்தல் தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. இப்பயிலரங்கில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர், துணைத் தலைமை இயக்குநர் (தொழுநோய்), மத்திய தொழுநோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தின் அனைத்து 51 மாவட்டங்களில் தொழுநோய் தடுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தொற்றுநோயியல் சூழலை ஆய்வு செய்தல், திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தல், செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிதல், கள அளவிலான அனுபவங்கள், சிறந்த நடைமுறைகளைக் கண்டறிதல் குறித்து உரையாடல்கள் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301249®=3&lang=1
****
SS/IR/SU/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2301330)
வருகையாளர் எண்ணிக்கை : 40