திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க மாநிலம் பாலூர்காட்டில் முதலாவது 'கௌசல் மகோத்சவ்': மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைவாய்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 AUG 2026 8:00PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மேற்கு வங்க மாநில அரசு, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மேற்கு வங்கத்தின் பாலூர்காட் பகுதியில் முதன்முறையாக 'கௌசல் மகோத்சவ்' வேலைவாய்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்தியது.

தெற்கு தினஜ்பூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். உற்பத்தி, சில்லறை வர்த்தகம், தளவாடங்கள், சுகாதாரம், விருந்தோம்பல், உணவு பதனப்படுத்துதல், வங்கி மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 7,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுடன் இதில் பங்கேற்றன. முகாமில் 7,500-க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் நடத்தப்பட்டு, 4,500-க்கும் அதிகமானோர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், மேற்கு வங்க அமைச்சர்கள், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300992&reg=3&lang=1

 

SS/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2301062) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali