இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

டிஎம் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 23 சதவீதப் பங்குகளை டாடா ஸ்டீல் லிமிடெட் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 18 AUG 2026 6:46PM by PIB Chennai

டாடா ஸ்டீல் நிறுவனம், டிஎம் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 23 சதவீதப் பங்குகளைக் கையகப்படுத்துவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

டிஎம் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் (டிஎம்ஐஎல்எல்), தற்போதுள்ள கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ஐகியூ மார்ட்ரேட் ஹோல்டிங் அண்ட் மேனேஜ்மென்ட் ஜிஎம்பிஹெச் (ஐகியூ மார்ட்ரேட்) வசம் உள்ள 23 சதவீதப் பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்துவது மற்றும் இதன் விளைவாக டிஎம்ஐஎல்எல் நிறுவனத்திலிருந்து ஐகியூ மார்ட்ரேட் வெளியேறுவது ஆகியவற்றை, முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு உள்ளடக்கியுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஐகியூ மார்ட்ரேட் நிறுவனம், டிஎம்ஐஎல்எல்-ன் பங்குதாரராகத் தொடராது. அத்துடன், டாடா ஸ்டீல் மற்றும் என்ஒய்கே (ஐரோப்பா) பி.வி. (என்ஒய்கே ஐரோப்பா) ஆகிய நிறுவனங்கள் டிஎம்ஐஎல்எல் நிறுவனத்தில் முறையே 74 சதவீதம் மற்றும் 26 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300957&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2301029) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu