பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் நிர்வாகத்தை மாற்றியமைத்து வருகின்றன: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 18 AUG 2026 4:42PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் ஆகியவை நிர்வாகத்தை மாற்றியமைத்து வருவதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நிர்வாக நடைமுறைகளும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்ந்து கற்றுக்கொண்டு புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்களுக்கான 15 நாள் புத்தாக்கப் பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்தப் பயிற்சி வெறும் விரிவுரைகளுக்கான தளமாக மட்டுமில்லாமல், கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம், தொடர்ச்சியான கற்றலுக்கான வாய்ப்பாக அமைய வேண்டும் என்றார்.

அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளையும், அரசு நிறுவனங்களின் மாண்பையும் அதிகாரிகள் நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசு அலுவலர்களுக்கு திறமையான தகவல் தொடர்பு அவசியம் என்றும், அரசு நிர்வாகிகள் ஊடகங்கள், பொதுமக்களுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச்செல்லும் முக்கியப் பொறுப்பு இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300853&reg=3&lang=1

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301026) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu