இந்திய போட்டிகள் ஆணையம்
பார்தி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை புருடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 6:44PM by PIB Chennai
பார்தி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்கு மூலதனத்தை புருடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பு, பார்தி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை புருடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவது தொடர்பானது ஆகும்.
புருடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம், ஆசியாவில் உள்ள தனது குழுமத்தின் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மைச் செயல்பாடுகளுக்கான பிரதான நிறுவனமாகச் செயல்படுவதுடன், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியங்களில் உள்ள தனது வணிகச் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆதரவையும் வழங்கி வருகிறது.
பார்தி ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு, இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) உரிமம் பெற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுச் சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300955®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2301019)
आगंतुक पटल : 6