நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மண்டல கிராமப்புற வங்கிகள் கடனுதவி வழங்குவதில் கடந்த நிதியாண்டில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 18 AUG 2026 4:17PM by PIB Chennai

மண்டல கிராமப்புற வங்கிகள் கடனுதவி வழங்குவதை விரிவுபடுத்துவதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கான கடனுதவி அளிப்பதில் 2025 - 26-ம் நிதியாண்டில் வலுவான பங்களிப்பை பதிவு செய்துள்ளன.

கடந்த 2024 - 25-ம் நிதியாண்டில் மண்டல கிராமப்புற வங்கிகளில் நிலுவையில் உள்ள மொத்த கடன்தொகை ரூ.5,24,163 கோடியாக இருந்த நிலையில், 2025 - 26-ம் நிதியாண்டில் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.5,78,349 கோடியாக அதிகரித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த வங்கிகளின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கான கடனுதவிக்கான இலக்கு 75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சரிசெய்யப்பட்ட நிகர வங்கிக் கடன் தொகையில் 91.7 சதவீதத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. அனைத்து மண்டல கிராமப்புற வங்கிகளும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு கடனுதவி அளிப்பதில் ஒட்டுமொத்த இலக்கை எட்டியுள்ளன. இது முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு தேவையான நிதியுதவியை அளிப்பதிலும், அத்தகைய நிறுவனங்களின் நிதிசார் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் கிராமப்புற வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்தி வந்ததை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

விவசாயம், அதுசார்ந்த நடவடிக்கைகளுக்கு மண்டல கிராமப்புற வங்கிகளின் கடன் தொகுப்பு மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இதில் நிலுவையிலுள்ள கடன்தொகை ரூ.3.78 லட்சம் கோடியாக உள்ளது. இது முக்கியத் துறைகளுக்கான மொத்த கடன் விகிதத்தில் 77 சதவீதமாகும்.

வேளாண் கடன் திட்டத்தில் 98 சதவீதம் பயிர் சாகுபடி சார்ந்த நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயிர் சாகுபடி, வேளாண் சார்ந்த செயல்பாடுகள், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு போன்ற நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி ரூ.66,978 கோடியாக உள்ளது. இது முக்கியத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கடனுதவியில் 13.6 சதவீதமாகும். இது கிராமப்புற தொழில்முனைவு, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மண்டல கிராமப்புற வங்கிகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300842&reg=3&lang=1

***

SS/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2300969) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Kannada