தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கான்பூர் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
प्रविष्टि तिथि:
18 AUG 2026 12:12PM by PIB Chennai
கான்பூரில் உள்ள ஆயுதத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 423 ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தலைமைத் தொழிலாளர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில், மண்டலத் தொழிலாளர் ஆணையர் உரிய நேரத்தில் மேற்கொண்ட சமரச முயற்சிகள் காரணமாக இந்த விவகாரத்திற்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சமரச முயற்சிகளின் காரணமாக, இம்மென்ஸ் மேன்பவர் தனியார் நிறுவனம் இந்த 423 தொழிலாளர்களுக்கும் 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களுக்கான நிலுவையில் உள்ள ஊதியத் தொகை ரூ.50 லட்சத்தை 2026 ஆகஸ்ட் 13 அன்று வழங்கியது.
மண்டல தொழிலாளர் ஆணையத்தின் முயற்சி காரணமாக தொழிலாளர் ஊதியம் சார்ந்த சிக்கல்களுக்கு உரிய நேரத்தில் தீர்வுகாணப்பட்டு ஊதியத்தொகை கிடைக்க வழிவகுத்துள்ளது. இதன்மூலம் வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டதுடன், இடையூறின்றி தொழிற்சாலை செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சமரச நடவடிக்கை மூலம் தொழிலாளர் நலன், நியாயமான பணிகள், தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்கி செயல்படுதல் உள்ளிட்ட சட்டரீதியான கடமைகள் குறித்தும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300745®=3&lang=1
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2300928)
आगंतुक पटल : 6