திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்கள் மாநாடு: தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த முடிவு

प्रविष्टि तिथि: 17 AUG 2026 7:02PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற 'கௌசல் மந்தன்'  எனும் திறன் அமைச்சர்களுக்கான பிராந்திய அளவிலான மாநாட்டிற்கு மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

மாநாட்டில் பேசிய அமைச்சர், 'பிஎம்- சேது' திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களை  எதிர்காலத்திற்கு உகந்ததாக மேம்படுத்திச் சிறப்பான மையங்களாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாவட்டந்தோறும் செயற்கை நுண்ணறிவு கற்றல், தொழில்துறை கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

 

மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இக்கூட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 600 இளைஞர்களுக்கு ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் சர்வதேச வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் வெளிநாட்டு மொழி, திறன் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300610&reg=3&lang=1

 

****

SS/EA/SH

 


(रिलीज़ आईडी: 2300678) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali