சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'ஸ்மைல்' திட்டம் மூலம் விளிம்புநிலை மக்களின் மறுவாழ்வு

प्रविष्टि तिथि: 17 AUG 2026 6:51PM by PIB Chennai

விளிம்புநிலை மக்களின் சமூக பொருளாதார மறுவாழ்வுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 'ஸ்மைல்'  திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் யாசகம் பெறுவோரின் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 42,589 பேர் அடையாளம் காணப்பட்டு, 12,710 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மருத்துவம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், திருநங்கைகளின் நலனுக்காக 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 23 'கரிமா கிரஹ்' மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,041 திருநங்கைகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் தேசிய போர்டல் மூலம் 33,303 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மருத்துவக் காப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300601&reg=3&lang=1

 

****

SS/EA/SH


(रिलीज़ आईडी: 2300651) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी