பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா - அமெரிக்கா கடற்படையினரிடையே வெடிபொருள் அகற்றுதல் பயிற்சியின் 8-வது தொடர் கொச்சியில் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:46PM by PIB Chennai
இந்தியா - அமெரிக்கா கடற்படையினரிடையே வெடிபொருள் அகற்றுதல் பயிற்சியின் 8-வது தொடர் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்தில் 2026 ஆகஸ்ட் 14 அன்று நிறைவடைந்தது. அப்போது இருநாட்டு கடற்படைக் குழுக்களும் தொழில் ரீதியிலான கலந்துரையாடல், சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம், செயல் விளக்கங்கள் ஆகியவற்றை மேற்கொண்டனர்.
இப்பயிற்சி வெடிபொருள் அகற்றும் நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு தளத்தை அளித்தது. நவீன வெடிபொருட்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு நடைமுறைகள், கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்தல், நீருக்கடியில் ஆளில்லா அமைப்புகளை பயன்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் நடைபெற்றன.
மூழ்கிய கப்பலைக் கண்டறிந்து மீட்பது, சிறப்பு உபகரணங்களை பயன்படுத்துவது, ஊர்ந்து செல்லும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300435®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2300608)
आगंतुक पटल : 9