பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி போன்ட்டா டெல்காடா துறைமுகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:37PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, லோக்யான் 2026 திட்டத்தின் ஒரு பகுதியாக அசோர்ஸில் உள்ள போன்ட்டா டெல்காடா துறைமுகத்தில் 2026 ஆகஸ்ட் 16 அன்று தனது பயணத்தை நிறைவு செய்தது.
இப்பயணத்தின்போது, போர்ச்சுகல் கடற்படையுடன் தொழில், கலாச்சார ரீதியிலான உரையாடல்கள் நடைபெற்றன. இது இருநாட்டு கடற்படையினருக்கும் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பையும், நட்புறவையும் வலுப்படுத்தியது.
போர்ச்சுகல் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான என்ஆர்பி சாக்ரஸில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உள்ளூர் ராணுவத் தலைவர்கள், தூதர்கள், புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினருக்கான ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பலில் மாலை வேளையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அத்துடன் இக்கப்பலில் 2026 ஆகஸ்ட் 15 அன்று போன்ட்டா டெல்காடாவில் இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெருமையுடனும், நாட்டுப்பற்றுடனும் கொண்டாடும் வகையில், கப்பல் அலங்கரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.
ஐஎன்ஸ் சுதர்ஷினி தற்போது லிஸ்பனுக்கு புறப்பட்டுள்ளது. 2026 ஆகஸ்ட் 21 அன்று ஐஎன்எஸ் சுதர்ஷினியும், என்ஆர்பி சாக்ரஸூம் இணைந்து கூட்டாகக் கடலில் கடந்து செல்லும் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும்.
***
Release ID: 2300428
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2300606)
आगंतुक पटल : 7