மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை மத்திய மீன்வளத்துறை கொண்டாடியது

प्रविष्टि तिथि: 17 AUG 2026 2:28PM by PIB Chennai

மீனவர்கள், மீன் விவசாயிகள் ஆகியோர் முன்னிலையில் மத்திய மீன்வளத்துறை புதுதில்லியில் 2026 ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தேசியப் பாடலின் பாரம்பரியத்தை போற்றியும், நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்களிப்பை அங்கீகரித்தும் வந்தே மாதரம் 150 ஆண்டுகள், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான இளையோர் சக்தி ஆகிய தேசியக் கருப்பொருட்களின் அடிப்படையில் இக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தில் மீன்வளம், நீர்வாழ் உயிரினத் துறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகிறது. இது சுமார் 3 கோடி மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதோடு, பெரும் வேலைவாய்ப்புகளையும் அளிக்கிறது.

இந்தியா, உலகில் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராகவும், 8 சதவீத பங்களிப்பையும் கொண்டு நீர்வாழ் உயிரின உற்பத்தித் துறையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இறால் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது. 2015-ம் ஆண்டு முதல் நீலப்புரட்சித் திட்டம், மீன்வளம், கடல்வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பிரதமரின் மீனவளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட முன்முயற்சிகள் மூலம் மத்திய அரசு இத்துறையில் ரூ.39.272 கோடி முதலீடு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300391&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2300589) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी