சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய கனிமத் தொகுதி ஏலங்களின் 8-வது கட்டம் குறித்த பயிலரங்கம், விளக்க நிகழ்ச்சி - பாட்னாவில் சுரங்க அமைச்சகம் நாளை ஏற்பாடு

प्रविष्टि तिथि: 16 AUG 2026 4:19PM by PIB Chennai

மத்திய அரசின் சுரங்க அமைச்சகம், முக்கிய கனிமத் தொகுதிகளின் 8-வது கட்ட ஏலம் குறித்த ஒரு விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சியையும், தேசிய கனிம ஆய்வு, மேம்பாட்டு அறக்கட்டளையான என்எம்இடிடி குறித்த ஒரு பயிலரங்கையும் நாளை (2026 ஆகஸ்ட் 17) பீகார் மாநிலம் பாட்னாவில் ஏற்பாடு செய்துள்ளது.

நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே தலைமையில், பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, பீகார் அரசின் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் பிரமோத் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில், பீகார் அரசின் சுரங்கத்துறை அமைச்சகம், இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

8-வது கட்ட ஏலமானது, 3 சுரங்கக் குத்தகை, 17 கூட்டு உரிமத் தொகுதிகள் உட்பட 20 கனிமத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது கிராஃபைட், அரிய புவித் தனிமங்கள், அரிய உலோகங்கள், வனேடியம், காலியம், டைட்டானியம், மாலிப்டினம், டங்ஸ்டன், பொட்டாஷ், பாஸ்போரைட், க்ளாக்கோனைட் போன்ற பல்வேறு வகையான முக்கிய கனிமங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த விளக்க நிகழ்ச்சி, வருங்கால முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் ஆகியோருக்கு கனிமத் துறையில் முதலீடு செய்வதற்கும் பங்கேற்பதற்குமான வாய்ப்புகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300175&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300190) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी