பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் நாளை நேபாளத்திற்குப் பயணம்

प्रविष्टि तिथि: 16 AUG 2026 2:59PM by PIB Chennai

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், நாளை (2026 ஆகஸ்ட் 17) முதல் 19-ம் தேதி வரை நேபாளத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும், ராணுவ ரீதியான உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

2026 ஆகஸ்ட் 17 அன்று, ராணுவத் தலைமைத் தளபதி துண்டிகேலில் உள்ள ராணுவ அரங்கில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். அத்துடன் நேபாள ராணுவத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். அதைத் தொடர்ந்து அவர் நேபாள ராணுவத்தின் தலைமைத் தளபதியுடன் பேச்சுநடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜெனரல் தீரஜ் சேத் நேபாள அதிபர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். அங்கு, இந்திய - நேபாள ராணுவங்களுக்கு இடையேயான தனித்துவமான பாரம்பரியத்திற்கு இணங்க, நேபாள அதிபர் திரு ராம் சந்திர பௌடெல், அவருக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்குகிறார்.

2026 ஆகஸ்ட் 18 அன்று, ராணுவத் தலைமைத் தளபதி சிவபுரியில் உள்ள இராணுவக் கட்டளை, பணியாளர் பயிற்சிப் பிரிவின் பயற்சி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார்.

2026 ஆகஸ்ட் 19 அன்று , ஜெனரல் தீரஜ் சேத் பொக்காராவில் நடைபெறும் முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணியில் கலந்துகொள்கிறார். 2026 ஆகஸ்ட் 19 அன்று அவர் இந்தியா திரும்புகிறார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300155&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300187) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi