கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, அல்வார் சரஸ் பால்பண்ணை வளாகத்தில் புதிய பால்பண்ணை ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்

प्रविष्टि तिथि: 15 AUG 2026 6:39PM by PIB Chennai

 பிரதமர் திரு நரேந்திர மோடியின் "கூட்டுறவின் மூலம் வளம்" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் உள்ள அல்வார் சரஸ் பால் பண்ணை வளாகத்தில், 2026 ஆகஸ்ட் 16 அன்று ஒரு புதிய பால் பண்ணை ஆலைக்கு அடிக்கல் நாட்டுவார். இந்த நிகழ்ச்சியில், திரு அமித் ஷா பல்வேறு பால் சங்கங்களின் பால் பதனப்படுத்தும் ஆலைகள், கால்நடைத் தீவன ஆலைகளையும் காணொலி மூலம் திறந்து வைப்பார்.

இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, புதிய மத்திய கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படுவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார். மேலும், நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பயனாளிகளுக்கு நிதியை விடுவிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தானின் 17 மாவட்டங்களில் ரூ.6,262 கோடி மதிப்பிலான

பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டு விழா, நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழா நடைபெறும். மேலும், வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட 10,548 பணியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.

மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299953&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300149) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati