வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'இல்லந்தோறும் தேசியக் கொடி' கூடத்தை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தில்லியில் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 8:35PM by PIB Chennai

மத்திய அரசின் முன்முயற்சியாக, 2026 ஆகஸ்ட் 9 முதல் 17 வரை நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் 'ஹர் கர் திரங்கா' எனப்படும் இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால், புது தில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் சென்டரில் இல்லம் தோறும் தேசியக் கொடி கூடத்தைத் (கியோஸ்க்) திறந்து வைத்தார்.

 

வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா வங்கி சாரா நிதி நிறுவனமான, வீட்டுவசதி  நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனமான ஹட்கோ (HUDCO) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, தேசபக்தி உணர்வுடன் கோலாகலமாக நடைபெற்றது.

 

ஹட்கோவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு சஞ்சய் குல்ஷ்ரேஸ்தா,  ஹட்கோ அதிகாரிகள், இந்தியா ஹேபிடேட் சென்டரில் அமைந்துள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிக்குழந்தைகள் ஆகியோர் முன்னிலையில் இந்தத் தொடக்க விழா நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தில் மக்கள் முழு மனதுடன் பங்கேற்று, தங்கள் வீடுகளில் தேசியக் கொடியைப் பெருமையுடன் ஏற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

அந்த இடம் மூவண்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டு, தேசபக்தி கொண்டாட்டச் சூழலை உருவாக்கியது. இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்திற்கு ஏற்ப படமும் அதில் புகைப்படம் எடுத்து தங்கள் தேசபக்தித் தருணங்களை செல்ஃபி படம்பிடித்துப் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கும் வகையில், கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனை அமைச்சர் திறந்து வைத்ததுடன், அவரும் அதில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அனைத்து வயதுப் பிரிவினரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, தேசியக் கொடியுடன் அந்தக் கூடத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஒற்றுமை, தேசபக்தி, தேசியப் பெருமிதம் ஆகிய உணர்வுகளைக் கொண்டாடும் ஒரு இயக்கத்தின் அங்கமாக இருப்பதில் தங்களின் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299622&reg=3&lang=1

(Release ID : 2299622)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299713) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English