மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு வன்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்றுமதி சார்ந்த மின்னணு உற்பத்தியை வலுப்படுத்துகின்றன
प्रविष्टि तिथि:
14 AUG 2026 1:27PM by PIB Chennai
மின்னணு வன்பொருள் தொழில்நுட்பப் பூங்கா எனப்படும் இஹெச்டிபி (EHTP) திட்டம் என்பது இந்தியாவிலிருந்து மின்னணு வன்பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான 100% ஏற்றுமதி சார்ந்த திட்டமாகும்.
இஹெச்டிபி திட்டம் மூலம் 2025-26-ம் ஆண்டில் மொத்தம் 79 நிறுவனங்களில் இருந்து ₹11,102 கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
இஹெச்டிபி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட இஹெச்டிபி நிறுவனங்கள் மொத்தம் 79. அவற்றில் 14 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் மூலம் 2025-26-ம் ஆண்டில் ₹ 314.62 மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
தகுதிவாய்ந்த இஹெச்டிபி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஊக்கத்தொகைகளும் நிதிச் சலுகைகளும், 2023-ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் விதிகளுக்கு உட்பட்டவை.
இந்தத் தகவலை மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா மக்களவையில் நேற்றுமுன்தினம் (12.08.2026) எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299340®=3&lang=1
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299693)
आगंतुक पटल : 5