பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்புடன் கூடிய ராணுவ நவீனமயமாக்கலே அரசின் முன்னுரிமை: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 5:38PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தற்சார்பு, எதிர்காலத்திற்குத் தயாரான பாதுகாப்புத் துறையின் மூலம் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குவதற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆகாஷ்வாணி வாயிலாக வீரர்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், இந்தியா தனது சொந்த பாதுகாப்புத் தேவைகளைத் திறம்படப் பூர்த்தி செய்யும் ஒரு நாடாக உருவெடுத்துள்ளது என்றும், அதே நேரத்தில் உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாகவும், ஏற்றுமதியாளராகவும் உருவெடுத்துள்ளது என்றும் கூறினார்.
2014-ம் ஆண்டில் வெறும் ₹46,000 கோடியாக இருந்த உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி, 2025-26 நிதியாண்டில் ₹1.78 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தச் சாதனை, பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்களுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். மொத்தப் பாதுகாப்பு உற்பத்தியில், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களும் பிற பொதுத்துறை நிறுவனங்களும் ஏறத்தாழ 76% பங்களிப்பதாகவும், தனியார் துறையின் பங்களிப்பு முந்தைய நிதியாண்டில் 22% ஆக இருந்த நிலையில், தற்போது 24% ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2013-14 நிதியாண்டில் வெறும் ₹686 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி, 2025-26 நிதியாண்டில், ₹38,424 கோடியாக வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார். இந்தச் சாதனையை, பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான மிக வலுவான சான்றாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299488®=3&lang=1
(Release ID : 2299488)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299690)
आगंतुक पटल : 7