நித்தி ஆயோக்
தொழில்முறை சேவைகளின் செயல்முறை குறித்த மதிப்பீடுகளை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
14 AUG 2026 5:13PM by PIB Chennai
நாட்டின் சேவைத் துறையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் துணைத்தலைவர் திரு அசோக்குமார் லஹிரி பங்கேற்று சேவைகள் துறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி நிதி சிப்பர், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறையின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் சேவைத் துறையின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகளைக் கொண்ட இந்த அறிக்கை நாட்டின் ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் தொழில்முறை சார்ந்த சேவைகளின் தனித்துவத்தை எடுத்துரைக்கிறது. தொழில்முறை சேவைகள் அதுசார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது.
இது நாட்டின் ஒட்டுமொத்த சேவைகள் ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது. உயர் மதிப்பிலான அறிவுசார் செயல்பாடுகளுடன் திறம்பட சேவைகளை வழங்குவதை இது உறுதி செய்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், பணபரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இது பெரிதும் உதவியாக உள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவில் இலக்குகளை எட்டும் வகையில் உலகளவில் போட்டித்தன்மைக் கொண்டதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும், எதிர்கால தேவைகளுக்கேற்ப சேவைத் துறையில் மாற்றங்களை உருவாக்குவதற்கும் இதுபோன்ற முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299470®=3&lang=1
****
TV/SV/GS/SH
(रिलीज़ आईडी: 2299681)
आगंतुक पटल : 5