பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லோகயான் 2026: ஐஎன்எஸ் சுதர்ஷினி போர்ச்சுகலின் போண்டா டெல்காடா துறைமுகத்தைச் சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 14 AUG 2026 2:37PM by PIB Chennai

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, லோகயான் 2026 பயணத்தின் ஒரு பகுதியாக போர்ச்சுகலின் அசோர்ஸில் உள்ள போண்டா டெல்காடா துறைமுகத்தை 2026 ஆகஸ்ட் 13 அன்று சென்றடைந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து புறப்பட்டு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக சவாலான 19 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து ஐஎன்எஸ் சுதர்ஷினி அங்கு சென்றடைந்துள்ளது. இக்கப்பல் அட்லாண்டிக் கடலைக் கடப்பது இது இரண்டாவது முறையாகும். கப்பல் பணியாளர்களின் சகிப்புத்தன்மை, மன உறுதி, கடல்சார் திறன்களை இது வெளிப்படுத்துகிறது.

போர்ச்சுகல் சென்றடைந்த இக்கப்பலுக்கு அந்நாட்டின் கடற்படை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியம், நட்பு, கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றை இப்பயணம் முன்னெடுத்துச் செல்கிறது. இத்துறைமுகத்தை அடைந்தபோது ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பலின் படைப்பிரிவு அதிகாரி, அசோர்ஸ் கடல்சார் மண்டலத் தளபதி கொமடோர் லூயிஸ் நிக்கல்சன் லாவ்ரடூரைச் சந்தித்துப் பேசினார். இப்பயணத்தின் போது தொழில்முறை சார்ந்த கலந்துரையாடல்கள், செயல்பாட்டு மறுசீரமைப்பு, கலாச்சாரப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான கடல்சார் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும். 15,000 கடல் மைல்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ள ஐஎன்எஸ் சுதர்ஷினி, இந்தியாவின் நற்பெயரையும் துடிப்பான கடல்சார் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் தூதராகத் தனது பயணத்தைத் தொடர்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299365&reg=48&lang=2

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2299607) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu