மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

சிப் முதல் புத்தொழில் வரை என்ற திட்டம் நாட்டின் செமிகண்டக்டர் வடிவமைப்புத் துறைக்கு வலுசேர்க்கிறது

प्रविष्टि तिथि: 14 AUG 2026 1:24PM by PIB Chennai

செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப செமிகண்டக்டர் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி, வடிவமைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு தேவையான கொள்கைகளை வகுப்பதுடன் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டின் செமிகண்டக்டர் வடிவமைப்பு சூழலமைப்பும், திறன் சார்ந்த தொழிலாளர்களுக்கான தளமும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில் செமிகண்டக்டர் வடிவமைப்புத் துறையில் உள்ள பணியாளர்களின் திறன் சார்ந்த இடைவெளியைக் குறைப்பதற்கும், சிப் வடிவமைப்பிலுள்ள உள்கட்டமைப்புச் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையிலும், சிப் முதல் புத்தொழில் வரை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் சிப் வடிவமைப்புத் துறையில் நிபுணத்துவத்துடன் கூடிய தொழில் துறைக்கு தயாராகும் வகையில் 85,000 பணியாளர்களை (பி.டெக், எம்.டெக், பி.எச்.டி) உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 68,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதிலுமுள்ள 332 கல்வி நிறுவனங்களுக்கு இந்தத் துறையில் முன்னனியில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மேம்பட்ட மின்னணு வடிவமைப்பு (தானியங்கி) கருவிகளைப் பயன்படுத்தும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299338&reg=3&lang=2

***

SS/SV/GS/SH 


(रिलीज़ आईडी: 2299543) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu