மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் நாட்டின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை அதிகரிக்க உதவுகின்றன
प्रविष्टि तिथि:
14 AUG 2026 11:49AM by PIB Chennai
நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை விரிவுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் மொத்த எண்ணிக்க 2125-ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பூங்காக்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள சேவைகளின் மதிப்பு 2025-26-ம் நிதியாண்டில், ரூ.7,73,898.97 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் 1,128 அலகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அலகுகள் மூலம் ரூ.1,62,624.08 கோடி மதிப்பிலான சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மென்பொருள் தொழில்நுட்ப அலகுகளை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கும் நடைமுறைகளை சீரமைக்கவும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பச் சேவைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கான தரவு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ரிசர்வ் வங்கி - மென்பொருள் பூங்காவின் இணையதள அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி சார்ந்த தரவு பரிமாற்றத்தை விரைவுப்படுத்துவதுடன், துல்லியமான தரவுகள், வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299304®=3&lang=2
***
SS/SV/GS/SH
(रिलीज़ आईडी: 2299539)
आगंतुक पटल : 5