பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆதி கர்மயோகி இயக்கத்தை அமல்படுத்துதல்

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:00PM by PIB Chennai

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஒரம், அவையில் இன்று, ஒரு அறிக்கையைச் சமர்பித்தார். ஆதி கர்மயோகி இயக்கத்தின் செயலாக்கம் குறித்து பழங்குடியினர் அமைச்சகம் மாநில, மாவட்ட அளவில் காலமுறை அடிப்படையில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வின் முதற்கட்டம் பழங்குடியினர் பகுதிகளில் அடிப்படை நிலையிலான நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் சமூக அடிப்படையிலான திறன் மேம்பாட்டு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம், 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 1 லட்சம் பழங்குடியினர் கிராமங்களில் பொறுப்புமிக்க நிர்வாகத்தை எளிதாக்க பயிற்சி பெற்ற அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், மகளிர் கூட்டமைப்புகள், பழங்குடியினர் இளைஞர்களைக் கொண்ட குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசு நிறுவனங்கள், பழங்குடியின சமூகத்திலிருந்து பயிற்சி பெற்ற அடிப்படை நிலையிலான தலைவர்களின் பெரிய குழுவை உருவாக்குவதன் மூலம் மாற்றத்தை உருவாக்கும் பழங்குடியினர் தலைமைத்துவத்தை வளர்ப்பதில் இத்திட்டம், சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298794&reg=3&lang=1

 

***

SS/IR/PS/SH   


(रिलीज़ आईडी: 2299159) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी