அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பயோஇ3 கொள்கையின் சுற்றுச்சூழல் விளைவுகள்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:06PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை, பயோஇ3 கொள்கையின் கீழ், புதைப்படிவ அடிப்படையிலான உள்ளீடுகளுக்குப் பதிலாக உயிரி சார்ந்த மாற்றுகளின் மூலமான உயிரி உற்பத்திக்கான தொழில்நுட்ப தயார்நிலை நிலையையும் இலக்குகளையும் அடையாளம் கண்டுள்ளது. புதைப்படிவ அடிப்படையிலான உள்ளீடுகளின் இறக்குமதியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட உயிரி உற்பத்தித் தீர்வுகளை உருவாக்கும் திட்டங்களுக்கு உயிரி தொழில்நுட்பத் துறை ஆதரவளிக்கிறது.
உயிரி தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்ட 'சுஜிவிகா' என்ற டிஜிட்டல் தளம், உயிரி தொழில்நுட்ப இறக்குமதி தரவுகளை வழங்குகிறது. இந்தத் தளம், இறக்குமதி தரவுகளின் அடிப்படையில் உள்நாட்டு உயிரி சார்ந்த தயாரிப்புகளை அடையாளம் காண உதவுகிறது. இதன் மூலம் , உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதையும், இறக்குமதியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தற்சார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்துகிறது.
பயோஇ3, கொள்கையானது, தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகளை உள்ளடக்கிய, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298802®=3&lang=1
***
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299147)
आगंतुक पटल : 10