அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விக்யான் டெக் 2026 முன்முயற்சி குறித்த தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 13 AUG 2026 2:07PM by PIB Chennai

விக்யான் டெக்-2026 என்ற, தேசிய முன்முயற்சி, உயிரி தொழில்நுட்பத் துறையால், 2026 மே 11 அன்று புதுதில்லியில் நடத்தப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் ஒரு முழுமையான அரசு அணுகுமுறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகம்.

இந்தக் கண்காட்சி, மத்திய அரசின் 14 அமைச்சகங்கள், துறைகளின் தொழில்நுட்ப பலங்களை ஒன்றிணைத்தது. அவற்றின் தன்னாட்சி நிறுவனங்கள், ஆய்வகங்கள் மூலம் வலுவான ஆராய்ச்சி, மேம்பாட்டு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அரசுன் முழு அணுகுமுறையின் அடிப்படையில், விண்வெளி தொழில்நுட்பங்கள்;  வேளாண்-உணவு தொழில்நுட்பங்கள்; உயிரி மருந்து, தொழில்நுட்பங்கள்;  ஆழ்தொழில்நுட்பப் பொருட்கள், குறைக்கடத்திகள் போன்ற முக்கியத் துறைகளில் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

இந்த முன்முயற்சியானது, அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்பக் காட்சிப்படுத்தல், ஆய்வக ஆராய்ச்சிக்கும் தொழில்துறைப் பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஒரு பொதுவான உத்திசார் தளமாகச் செயல்பட்டது.

அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298803&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2299146) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu