பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் ஐஜிஓடி கர்மயோகி இயக்க செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:24PM by PIB Chennai
தற்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 90,276 அரசு ஊழியர்கள் ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். கர்மயோகி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க அரசு இன்னும் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இதுவரை, மேற்கு வங்க அரசின் முன்னுரிமைத் துறைகளுக்காக எட்டு திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஐஜிஓடி கர்மயோகி டிஜிட்டல் கற்றல் தளம், துறைசார் செயல்பாட்டுத் திறன்களை உள்ளடக்கிய 5,600-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவுகள், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலுவர்கள் உட்பட, பதிவுசெய்த அனைத்துப் பயனர்களும் பயன்படுத்துவதற்குக் கிடைக்கின்றன. மேற்கு வங்கத்தில் பணியாற்றுபவர்கள் உட்பட, மத்திய அரசின் அனைத்து ஊழியர்களும், அகில இந்தியப் பணி அதிகாரிகளும், ஐஜிஓடி தளத்தில் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்பட்ட பாடப்பிரிவுகளைக் கட்டாயமாக முடிக்க வேண்டும். இது அந்தந்தக் காலத்திற்கான அவர்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கைகளில் பிரதிபலிக்கும்.
பணியாளர் நலன், பயிற்சித் துறை, அனைவருக்குமான பயிற்சித் திட்டத்தின் மூலம், மேற்கு வங்கம் உட்பட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் இலக்கு வைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது.
பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298778®=3&lang=1
***
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299133)
आगंतुक पटल : 6