பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய உயர்கல்வி ஆய்வு உதவித்தொகை திட்டம்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:23PM by PIB Chennai
மத்தியப் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் இன்று அளித்த தகவலின்படி, பழங்குடியினருக்கான தேசிய உயர்கல்வி ஆய்வு உதவித்தொகை திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 3,750 ஆய்வு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினருக்கான தேசிய உயர்கல்வி ஆய்வு உதவித்தொகை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். எனவே, மாநில வாரியாக இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அந்த கல்வியாண்டின் ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை பெறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் 750 விண்ணப்பதாரர்களின் தகுதிப்பட்டியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் தேசிய உயர்கல்வி ஆய்வு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2,250 உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.2023-24-ம் ஆண்டில் 294 மாணவர்களும், 2024-25-ம் ஆண்டில் 156 மாணவர்களும், 2025-26-ம் ஆண்டில் 226 மாணவர்களும் ஆராய்ச்சியை நிறைவு செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298825®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299124)
आगंतुक पटल : 13