பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
புலிகள் காப்பகப் பகுதிகளிலிருந்து பழங்குடியினரை இடம்பெயரச்செய்வது குறித்து விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2026 2:06PM by PIB Chennai
புலிகள் காப்பகப் பகுதிகளிலிருந்து பழங்குடியினரை இடம்பெயரச்செய்வது உட்பட அவர்களது உரிமைகள், நிலம் பறிபோதல், வளர்ச்சிப்பணிகள், அத்துமீறல்கள், வன உரிமை கோரிக்கைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான புகார்களைத் தனியாக விசாரித்து தேவைப்படும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய பரிந்துரைகளை அளிப்பது தேசிய பழங்குடியினர் நல ஆணையத்தின் கடமை என்று பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் இன்று தெரிவித்தார்.
புலிகள் காப்பகப் பகுதிகளிலிருந்து கிராமங்களை விருப்பத்தின்படி இடமாற்றம் செய்வது தொடர்பான சில கோரிக்கைகள் தேசியப் பழங்குடியினர் நல ஆணையத்தால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனவிலங்கு (பாதுகாப்பு)சட்டம் 2006-பிரிவு 38-வி-(5), வன உரிமைகள் சட்டம் 2006-பிரிவு 4(2) ஆகிய விதிகளின்படி, முக்கியத்துவம் வாய்ந்த புலிகள் வாழ்விடத்திலிருந்து கிராமங்களை இடமாற்றம் செய்யும் நடைமுறை மக்கள் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படுவதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் பிரிவு 38ஒ(1)(சி)-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் (சுற்றுலா நடவடிக்கைகள், புலி திட்டத்திற்கான விதிமுறைகள்) 2012 பொது தளத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298801®=3&lang=1
***
SS/IR/PS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2298991)
வருகையாளர் எண்ணிக்கை : 55