உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் முதலாவது தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை 'பிரஹார்'

இடுகை இடப்பட்ட நாள்: 12 AUG 2026 4:48PM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது விரிவான தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் வியூகமான 'பிரஹார்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், தீவிரவாதச் செயல்களைத் தடுப்பதற்கும் தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் இக்கொள்கை வழிவகை செய்கிறது. நிகழ்நேர உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாத்தல், மத்திய மாநில காவல் படைகளின் கூட்டுச் செயல்பாட்டை உறுதி செய்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் இவ்வியூகத்தில் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதிப்பரிமாற்றங்களைத் தடுத்தல், கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல், சர்வதேச தரநிலைகளின்படி எல்லை தாண்டிய பயங்கரவாத நிதி உதவியைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேசியப் பாதுகாப்பு உத்திகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்யவும், அவற்றை மேலும் வலுப்படுத்தவும் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மாநாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298334&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2298687) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese