உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மூலம் சைபர் குற்றங்களைத் தடுத்து டிஜிட்டல் அடையாளப் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை: மத்திய இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் தகவல்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 4:50PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மூலம் சைபர் குற்றங்களைத் தடுத்து டிஜிட்டல் அடையாளப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், மாநில அரசுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கி வருவதாகக் கூறினார். இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார.

நிதி மோசடி புகார்களை உடனடியாகப் பதிவு செய்து பணப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்த சிறப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் நிதி மோசடி தொடர்பான புகார்கள் பெறப்பட்டுப் பெருமளவில் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், 1930 என்ற கட்டணமில்லா உதவி எண் பயன்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார். காவல்துறை அதிகாரிகளுக்காக இணையவழிக் கற்றல் தளங்கள் செயல்பட்டு வருவதோடு, சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டங்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298336&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2298636) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी