பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியினரின் கலாச்சார அடையாளம், மொழி மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2026 12:42PM by PIB Chennai
பழங்குடியின மக்களின் கலாச்சார பாரம்பரியம், கலை வடிவங்கள், மொழிகள், வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட நாடு முழுவதும் உள்ள 29 பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களின் மொழிகள், நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பழங்குடியின கலாச்சார வளங்களைப் பாதுகாத்து காட்சிப்படுத்த ‘டிரைப்எக்ஸ்’ டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சோஹ்ராய் ஓவியங்கள், டோக்ரா கைவினைப்பொருட்கள், ஜாதுபேட்டியா சித்திரக்கலை ஆகியவை குறுகிய காலச் சான்றிதழ் படிப்புகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன..
இத்தகவலை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மாநிலங்கவையில் தெரிவித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298077®=3&lang=1
***
SS/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2298612)
வருகையாளர் எண்ணிக்கை : 46