பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் 'தேசிய கிராம சுயராஜ்ய இயக்கம்' செயல்படுத்துவது குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 2:35PM by PIB Chennai
பஞ்சாயத்து அமைப்புகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்த மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் 'தேசிய கிராம சுயராஜ்ய இயக்கம்' 2022-23 நிதியாண்டு முதல் மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், பஞ்சாயத்து பவன்கள் கட்டுதல், கணினி வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் மத்திய அரசு ஆதரவளிக்கிறது. 2022-23 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மத்திய அரசின் பங்காக ₹130.65 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5,17,632 பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 199 பஞ்சாயத்து பவன்கள் கட்டவும், 1,712 கணினிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதில், ஆகஸ்ட் 5, 2026 நிலவரப்படி 124 பஞ்சாயத்து பவன்கள் கட்டி முடிக்கப்பட்டு 1,185 கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 'இ-பஞ்சாயத்து' திட்டத்தின்கீழ் 267 பஞ்சாயத்துகள் அரசு மின்னணு சந்தையில் இணைந்துள்ளன. 1,881 கிராம பஞ்சாயத்துகள் 2026-27 நிதியாண்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை 'இ-கிராம் ஸ்வராஜ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.
இத்தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298160®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2298524)
आगंतुक पटल : 11