கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் சமர்த் மையங்கள் மூலம் சுமார் 33,000 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
12 AUG 2026 11:26AM by PIB Chennai
இந்திய மூலதனப் பொருட்கள் துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டிற்கு மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொள்கிறது.
அந்தவகையில், தொழில்துறை 4.0-ஐ ஊக்குவிப்பதற்கு நான்கு நவீன மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் விரைவு மாற்றத்தக்க மையத்தை (சமர்த்) அமைத்தல் மேம்பட்ட வெல்டிங் தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி அளிக்க திருச்சி பெல்-ன் (பாரத் கனரக மிகுமின் நிறுவனம்) வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொது பொறியியல் வசதி மையத்தை அமைத்தல், உயர்நிலை திறன் மேம்பாட்டுக் குழுமம் மூலம் 23 தகுதித் தொகுப்புகளை உருவாக்குதல், மூலதனப் பொருட்கள் மற்றும் உத்திசார் திறன் மேம்பாட்டுக் குழுமம் மூலம் 23 தகுதி தொகுப்புகளை உருவாக்குதல், கருவிமயமாக்கல், தானியங்கி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை திறன் மேம்பாட்டுக் குழுமம் மூலம் 12 தகுதித் தொகுப்புகளை உருவாக்குதல் போன்ற முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சுமார் 33,000 பேருக்கு சமர்த் மையங்களில் கனரகத் தொழில்துறை அமைச்சகம் பயிற்சி அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 8,500-க்கும் மேற்பட்டோர் திருச்சி பெல் நிறுவனத்திலுள்ள வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது பொறியியல் வசதி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298051®=3&lang=1
***
SS/IR/SU/KR
(रिलीज़ आईडी: 2298309)
आगंतुक पटल : 11