சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காசநோய் இல்லா இந்தியா : நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர் நட்டா ஆலோசனை
प्रविष्टि तिथि:
11 AUG 2026 8:03PM by PIB Chennai
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இடையே, மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். "காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நாடாளுமன்றவாதிகள்" எனும் தலைப்பில் நடந்த இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரல்ஹாத் ஜோஷி, அனுப்பிரியா படேல், சுரேஷ் கோபி மற்றும் ஷோபா கரந்தலாஜே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாட்டில் காசநோயை ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் '100 நாள் காசநோய் இல்லா இந்தியா இயக்கம்' குறித்து இக்கூட்டத்தில் மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2026 மார்ச் 24 முதல் ஜூலை 4,வரை நடந்த இதன் இரண்டாம் கட்டத்தில், சுமார் 2.02 கோடிக்கும் அதிகமான மக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 2015 முதல் 2024 வரையிலான காலத்தில் காசநோயின் பாதிப்பு 21 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நகரப்புறங்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களிடையே பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தவும், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கத் தங்களது தொகுதிகளில் மக்கள் இயக்கமாக இதை எடுத்துச் செல்லவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நட்டா வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297901®=3&lang=1
செய்தி அடையாள எண் 2297901
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2298001)
आगंतुक पटल : 13