கூட்டுறவு அமைச்சகம்
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் சேமிப்புத் திறன்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 5:43PM by PIB Chennai
கூட்டுறவுத் துறையில், தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 12 மாவட்டங்களில் 0.52 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட 12 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், மொத்தம் 13 திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில அரசுகளால் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வா பாண்டே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 1,500 மெட்ரிக் டன் திறன் கொண்ட கிடங்கு ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்டதுடன், மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து பெறப்படும் முன்மொழிவுகளின் அடிப்படையில், படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதற்கென மாநில வாரியாக இலக்குகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வேளாண் சந்தைகளுக்கான உலகட்டமைப்பு அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் ங்கங்கள்/கூட்டுறவுச் சங்கங்கள் கிடங்குகளை 18 மாதங்களுக்குள் கட்டி முடித்து, அதற்கான இறுதி மானியக் கோரிக்கைகளுக்காகப் பணி நிறைவு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எனினும், கால தாமதத்திற்கான காரணங்கள் நியாயமானதாக இருந்தால், கூடுதலாக 6 மாதங்கள் வரை கால நீட்டிப்பு அனுமதிக்கப்படலாம்.
இத்திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அல்லது பிற கூட்டுறவுச் சங்கங்களின் மட்டத்தில் புதிய அறிவியல் பூர்வமான சேமிப்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கு மட்டுமே நிதி உதவி கிடைக்கிறது. கூட்டுறவுத் துறையில் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்துக் கிடங்குகளும் இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னரே உருவாக்கப்படுகின்றன. பழைய அல்லது பழுதடைந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் இத்திட்டத்தின் கீழ் நவீன அறிவியல் பூர்வமான கிடங்குகளாகக் கருதப்படுவதில்லை.
மேலும், இத்திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட தகுதியுள்ள கூட்டுறவுச் சங்கங்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்திலோ அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்திலோ உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க முடியும். தேவைப்படும் இடங்களில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் நில ஒதுக்கீடு எளிதாக்கப்படுகிறது. நிலம் கிடைப்பது, கடன் அனுமதி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் /பிற கூட்டுறவுச் சங்கங்களின் நிதித் திறன் தொடர்பான சிக்கல்கள், மாநில அரசுகள் செயல்படுத்தும் முகமைகளுடன் ஒருங்கிணைந்து தீர்வு காணப்படுகின்றன.
கூட்டுறவுத் துறையில் தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், சேமிப்புக் கட்டணங்களுக்கான தனி ஒதுக்கீடு அல்லது சிறப்பு மானியம் போன்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மக்களவையில்,எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297740®=3&lang=1
(Release ID: 2297740)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2298000)
आगंतुक पटल : 20