விவசாயத்துறை அமைச்சகம்
மக்களின் இடம்பெயர்வுக்கான காரணம் குறித்த ஆய்வு நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 5:43PM by PIB Chennai
கிராமப்புற மக்கள் இடம்பெயரும் பகுதிகள் அல்லது இடம்பெயர்வு தொடர்பான தரவுகளை, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பராமரித்து வருவதில்லை. இருப்பினும், கிராமப்புற மக்களின் இடம்பெயர்வு தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் (சாலைகள், குடிநீர் விநியோகம், வீட்டுவசதி, சுகாதாரம், தகவல் தொடர்பு இணைப்பு வசதிகள்), மண்டல அளவிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்க, இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், நிதி உதவி, கடன் வசதிகளை எளிதாகப் பெற வகை செய்தல் போன்ற பல்வேறு பரிமாண நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் உள்ள கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம், வாழ்வாதார இயக்கம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டம், 'தீன்தயாள் அந்த்யோதயா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள், தேசிய சமூக உதவித் திட்டம், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும்.
வறட்சி, வெள்ளம், உள்ளிட்ட பிற தீவிர இயற்கை பேரிடர் சார்ந்த நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள், பேரிடர் தயார்நிலை தொடர்பான பணிகள், விவசாயம், கிராமப்புற வாழ்வாதாரச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், கிராமப்புற சமூகங்களின் மீள்திறனை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
இவ்வாறு, வாழ்வாதார உள்கட்டமைப்பு, நீர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மீதான ஒருங்கிணைந்த கவனம், கிராமப்புற வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கவும், விவசாயம், அது சார்ந்த வாழ்வாதாரங்களை வலுப்படுத்தவும், நிலையான கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மக்களவைத் தொகுதி உட்பட நாட்டின் அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் பொருந்தும். மேலும் இவை வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதையும், பருவகால, அது சார்ந்த வாழ்வாதார நெருக்கடிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு. கம்லேஷ் பாஸ்வான் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297739®=3&lang=1
(Release ID: 2297739)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2297982)
आगंतुक पटल : 15