மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயிப்பதில் ஒழுங்குமுறை கடைப்பிடிப்பு

प्रविष्टि तिथि: 11 AUG 2026 3:10PM by PIB Chennai

மருந்துகளின் விலைகள் தேசிய மருந்து விலை நிர்ணயக் கொள்கை 2012-ன் அடிப்படையில் வெளியிடப்பட்ட மருந்துகள் (விலைக்கட்டுப்பாடு) 2013-ன் விதிமுறைகளின் படி முறைபடுத்தப்படுகிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்துகளுக்கான அதிகபட்ச விலையையும் புதிய மருந்துகளுக்கான சில்லறை விலையையும் நிர்ணயிக்கிறது. பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளுக்கான அதிகபட்ச விலைகள் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் பொருந்தும் அதே வேளையில் புதிய மருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலைகள் விண்ணப்பித்த உற்பத்தியாளர், சந்தைப்படுத்துபவர் ஆகியோருக்கு பொருந்தும். அவர்கள் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ள அதிகபட்ச விலை அல்லது சில்லறை விலைக்குள் (ஜிஎஸ்டியுடன் சேர்த்து) விற்க வேண்டும். எனினும், சந்தை  நிலவரங்களுக்குகேற்ப பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளுக்கான அதிகபட்ச விலையை விடவோ அல்லது புதிய மருந்துக்கான சில்லறை விலையை விடவோ குறைவான விலையில் விற்பனைச் செய்ய உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் அந்த மருந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு குறைவாக இருக்குமேயானால், ஒரே மாதிரியான பட்டியலிடப்பட்ட மருந்தை வேறு வணிக பெயர்களில் விற்கும்போது உற்பத்தியாளர்கள் வெவ்வேறு விலைகளை நிர்ணயிப்பதில் தடை கிடையாது.

இத்தகவலை மத்திய ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297570&reg=3&lang=1

****

TV/IR/PS/SH


(रिलीज़ आईडी: 2297909) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati