ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறையில் மறுசுழற்சிக்கான தொழிநுட்பம், சுழற்சி அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:39PM by PIB Chennai
ஜவுளித் துறையில், தொழில்நுட்பம் சார்ந்த மறுசுழற்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், சுழற்சி அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகள் சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தவும், மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
i) 2026–27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர், உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த, நீடித்த ஜவுளி, ஆயத்த ஆடைத் துறையை மேம்படுத்துவதற்காக ‘டெக்ஸ்-ஈகோ என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த முன்முயற்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள், ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள், சிறப்பு மையங்கள், தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள், பிற தரப்பினருடன் இணைந்து, ஜவுளித் துறையில் கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, மதிப்புக்கூட்டல், மறுசுழற்சி செய்யப்பட்ட இழைகளின் உருவாக்கம், நிலைத்தன்மை கொண்ட பேக்கேஜிங், கைவிடப்பட்ட ஜவுளிகளிலிருந்து பிற உயர் மதிப்பிலானப் பொருட்கள் உள்ளிட்ட சுழற்சி அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான புதுமையான தொழில்நுட்பங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ii) மத்திய ஜவுளி அமைச்சகம், இந்தியாவில் ஜவுளிக் கழிவு மதிப்பு நடைமுறைகளின் வரைபடம் என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த அறிக்கை, உற்பத்தி கழிவுகள் போன்ற நுகர்வோருக்கு முந்தைய ஆதாரங்களிலிருந்தும், நுகர்வோருக்குப் பிந்தைய கழிவுகளிலிருந்தும் உருவாகும் ஜவுளிக் கழிவுகளின் அளவை மதிப்பிடுகிறது.
iii) நிலையான உற்பத்தி, சான்றளிப்பு, ஏற்றுமதி குறித்து விவாதிப்பதற்காக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், சமூக, நிர்வாகம் தொடர்பான பணிக்குழுவை அமைத்துள்ளது.
iv) மேலும், மத்திய அரசு கொள்கை ஆதரவு, ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் ஜவுளி மறுசுழற்சி, நிலையான உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது.
மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இன்று மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297514®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2297897)
आगंतुक पटल : 12